www.garudabazaar.com

குஷ்பூவின் கார் விபத்து - கண்டெய்னர் லாரி மீது மோதியதால் ஏற்பட்ட சேதம். ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூவின் கார் சாலையில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்பூவின் கார் விபத்து | Popular actress khushboo's car met with accident

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் நடிகை குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரியாலிட்டி ஷோக்கள், தொலைக்காட்சி சீரியல் உள்ளிட்டவற்றிலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி ஈடுபட்டு வருகிறார். 

நடிகை குஷ்பூவின் கார் விபத்து | Popular actress khushboo's car met with accident

இந்நிலையில் தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது, அவரது கார் கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரது காருக்கு பலமான சேதம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்த அவரது பதிவில், 'கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றியிருக்கிறார்' என பதிவிட்டுள்ளார். 

 

குஷ்பூவின் கார் விபத்து - கண்டெய்னர் லாரி மீது மோதியதால் ஏற்பட்ட சேதம். ரசிகர்கள் அதிர்ச்சி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை குஷ்பூவின் கார் விபத்து | Popular actress khushboo's car met with accident

People looking for online information on Khushboo, Khushboo Accident will find this news story useful.