www.garudabazaar.com
iTechUS

"நிறைய இடத்துல உங்கள பத்தி தெரியாம பேசிட்டேன்".. கவின் குறித்து உருக்கமான போஸ்ட் போட்ட நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை தொடர்களில் நாயகனாக நடித்து பின்னர் வெள்ளித்திரை வரை தற்போது கலக்கி வருபவர் நடிகர் கவின். நடுவே இவர் தமிழில் ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக தோன்றியிருந்தார். அந்த சமயத்திலும் மக்கள் மத்தியில் கவினுக்கு அமோக ஆதரவு கிடைத்திருந்தது.

Popular actress emotional post about Dada Kavin

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், கவின் நடிப்பில் தற்போது 'டாடா' என்ற திரைப்படம், தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். மேலும் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் உள்ளிட்ட பலரும் டாடா திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

டாடா படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. அப்படி இருக்கையில் தற்போது படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் நடிகை அபர்ணாதாஸ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவினை குறிப்பிட்டு பகிர்ந்துள்ள நெகழ்ச்சியான பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Popular actress emotional post about Dada Kavin

Images are subject to © copyright to their respective owners

இது தொடர்பாக அபர்ணா தாஸ் பகிர்ந்துள்ள பதிவில், "எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. எனக்கு உங்களை தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும். எனக்கு டாடா படத்தை கொடுத்ததற்கும் நன்றி. நீங்கள் இந்த படத்திற்காக நிறையவே உழைத்துள்ளீர்கள். அனைத்து துறைகளிலும் பணிபுரிந்தீர்கள். சில பிரச்சனைகள் வரும் போது அதை எல்லாம் போராடி சரி செய்தீர்கள். நிறைய விஷயங்கள் உங்களை கீழே தள்ள முயற்சி செய்தாலும் அதை எல்லாம் பலமாக தாண்டி இந்த படத்தை சிறப்பாகவும் ஆக்கியுள்ளீர்கள்.

Popular actress emotional post about Dada Kavin

Images are subject to © copyright to their respective owners

இன்டர்வியூக்கள் மற்றும் நிகழ்ச்சி மேடையில் உங்களைப் பற்றி பேச வேண்டும் என விரும்பினேன். ஆனால், என்னால் அது முடியவில்லை. நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்த படம் உருவாகி இருக்காது. அனைத்திற்கும் நன்றி. பெரும்பாலான இன்டர்வியூக்களில், நீங்கள் திடீரென கோபப்படுவதாக நான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சரியான விஷயத்திற்கு மட்டுமே சண்டை போட்டீர்கள்.

 

நீங்கள் அற்புதமான நபர் மற்றும் நடிகராக இருப்பதால் நீங்கள் மென்மேலும் பெரிய இடங்களுக்கு செல்வீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். நான் ஒரு சிறந்த தோழியாக எப்போதும் உங்களுடன் இருப்பேன்" என தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் அபர்ணா தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress emotional post about Dada Kavin

People looking for online information on Aparna Das, Dada, Kavin will find this news story useful.