www.garudabazaar.com

அவரா இவர்?... அதிர்ந்து போன ரசிகர்கள்... உதவிக்கரம் நீட்டுவார்களா திரைத்துறையினர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாழ்க்கை சில நேரங்கள் மனிதர்களைப் புரட்டிப் போட்டு விடுகிறது. அதற்கு கண்கூடான சாட்சியாக மாறி இருக்கிறார் பிரபல நடிகர். அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தவசி. கிராமிய கதாபாத்திரங்களில் தனது நகைச்சுவையான நடிப்பிற்காக இவர் பிரபலம் அடைந்தவர். அதற்கு பின்பு சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மிகவும் சோகமாந செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

popular actors painful situation shocks fans and cinema industry

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கிறார். கட்டுமஸ்தான தேகம் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் காட்சி அளிக்கிறார். அவரது தற்போதைய நிலைமையை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்நிலையில் பொது மக்களும், திரைத்துறையை சார்ந்தவர்களும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அவரா இவர்?... அதிர்ந்து போன ரசிகர்கள்... உதவிக்கரம் நீட்டுவார்களா திரைத்துறையினர்..! வீடியோ

Tags : Thavasi

popular actors painful situation shocks fans and cinema industry

People looking for online information on Thavasi will find this news story useful.