பிரபல நடிகர் தவசி சாலை விபத்தில் படுகாயம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 03, 2019 10:30 AM
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாக நடித்தவர் தவசி. அந்த படத்தில் அவர் பேசிய கருப்பன் குறும்புக்காரன் என்ற வசனம் மிகப் பிரபலம். தொடர்ந்து தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
![Popular actor Thavasi Got severe injured in Road accident Popular actor Thavasi Got severe injured in Road accident](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actor-thavasi-got-severe-injured-in-road-accident-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் நடிகர் தவசி, இயக்குநர் ராஜ்கபூரின் சின்னத்திரை தொடருக்காக திண்டுக்கல் - தேனி இடையே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தனியார் விடுத்திக்கு செல்லும் வழியில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். தற்போது அவருக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறதாம். இந்த விபத்தில் பிரபல திரைப்பட புகைப்படக்கலைஞர் ஸ்டில்ஸ் சிவா மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Thavasi, Road Accident