'குழந்தை பிறந்து 40 நாள் ஆச்சு... இந்த நாளில் அது இயலாத காரியம்'' - பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். 21 நாட்களும் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று ஆறுதல் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், டெல்லியில் இருந்து வந்த ஒருவர் தற்போது குணமாகியுள்ளதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அவர் தமிழகத்தில் இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மளிகை, பால் போன்ற அத்தியாவசியக் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ''எனது குழந்தை 40 நாட்களை நிறைவு செய்துள்ளான். கோயிலுக்கு செல்ல நினைத்தோம். இன்றைய நிலையில் அது இயலாத காரியம். அதனால் வீட்டிலேயே வேண்டிக்கொண்டோம். ஆரோக்கியமான குடும்பமாக இருப்பதற்கு நன்றியுள்ளவளாக உணர்கிறேன்'' என்றார்.