www.garudabazaar.com

2 மற்றும் 4 வயது மகள்கள், மனைவி உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகரின் குடும்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல WWE வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ஜான்சன் ரசிகர்களால் தி ராக் என்றே அழைக்கப்படுகிறார். அவருக்கென உலக அளவில் பிரத்யேகமாக பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனக்கும் தனது மனைவி, 2 மற்றும் 4 வயது மகள்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தார்.  மேலும் தனது மகள்களுக்கு லேசான தொண்டையில் கரகரப்பு இருந்ததாகவும் தற்போது அவர்களது உடல்நிலை சிறப்பாக உள்ளதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இப்படியொரு கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டதில்லை என்று தெரிவித்த அவர், தங்கள் மூலம் வேறு யாருக்கும் நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடித்ததாகவும் தெரிவித்தார். மேலும் ரசிகர்களையும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து தங்களது குடும்பத்தை பாதுகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor family including his 2 and 4 year old kids tested positive for Covid-19 | குழந்தைகள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகரின் கு

People looking for online information on Coronavirus, Covid 19, Dwayne Johnson will find this news story useful.