கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி நடிகை.. கணவருடன் செம கியூட் டான்ஸ்... வைரல் வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் சினிமா நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மனதில் ஈஸியாக இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். நேர்த்தியான நடிப்பின் மூலம் வில்லி வேடங்களில் புகுந்து விளையாடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்தார். அதேபோல முன்பு வாணி ராணி, செம்பருத்தி, அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி', சன் டிவியில் 'பூவே உனக்காக' போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரீதேவி அசோக் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் புகைப்படம் வெளியிட்டு தான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறும் பொழுது "கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நடனமாடுவது பாதுகாப்பானதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஒரு வேளை அது குழந்தையை பாதிக்குமா என்ற கேள்வியும் இருக்கும். இதற்கு சரியான பதில் நிச்சயம் இல்லை என்பதே. கர்ப்ப காலத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மிகவும் இயல்பாக எடுத்து உங்களது உடற் பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள். தினமும் குறுகிய நேரத்திற்கு நடனமாடுவது மிகவும் பாதுகாப்பானது, ஆனாலும் உங்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி தான் இதை செய்ய வேண்டும். அதேபோல மிகவும் எளிமையான நடன ஸ்டெப்புகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது" என்று கூறியுள்ளார்.