www.garudabazaar.com

GP Muthu : "ஒழுங்கா என் கலர் ஜட்டிய அனுப்புங்க.." - பிக்பாஸிடம் தன் ஸ்டைலில் மிரட்டிய GP முத்து.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu asks to provide his inners bigg boss 6 tamil

Also Read | பாடகி சைந்தவியின் புதிய பரிமாணம்.. சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

GP Muthu asks to provide his inners bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

GP Muthu asks to provide his inners bigg boss 6 tamil

இதில் முக்கிய போட்டியாளராக ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக உள்நுழைந்த ஜிபி முத்து, முதல் நாள் பயந்ததும், அவருக்கு ஆதாம், ஏவாள் உதாரணத்தை சொல்லி கமல் சமாதானம் சொன்னதும் வைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் கேமராவின் முன்னால் நின்று கொண்டு ஜிபி முத்து நிறையவே பேசுகிறார். எப்போதுமே இப்படி கேமராவை பார்த்தால் தனியாக பேசி சந்தோஷங்களை வெளிப்படுத்தும் ஜிபி முத்து, முன்னதாக தன்னுடைய குடும்பத்திற்கு ஹாய் சொல்லி இருந்தார். தான் ஜாலியாக இருப்பதாவும் குறிப்பிட்டு இருந்தார்.

GP Muthu asks to provide his inners bigg boss 6 tamil

இந்நிலையில் குயின்ஸி, நிவாஷினி உள்ளிட்டோர் ஜிபி முத்துவுடன் இணைந்து பிக்பாஸ் வீட்டின் ஒரு கேமராவின் முன்னால் நின்றபடி தங்களது ஆடைகளை தரசொல்லி கேட்கின்றன்ர். அப்போது ஜிபி முத்து தனது உள்ளாடைகளை தர சொல்லி கேட்கிறார். ஏற்கனவே  தன் டிரெஸ் வந்தால் தன் ரேஞ்சே வேற என சொல்லி கொண்டிருந்த ஜிபி முத்து, இம்முறை தன் உள்ளாடைகளை தரவில்லை எனறால் அவ்வளவுதான் பாத்துக்கிடுங்க என தன் ஸ்டைலில் சொல்ல, கேமரா தலையாட்டுகிறது. அப்போது, “ஆஹா.. ஏன் அதட்டி சொன்னாதான் கேப்பியளா?” என மீண்டும் ஜாலியாக கேட்கிறார்.

Also Read | ஓடிடியில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புது படம்.. ட்ரெய்லரை பகிர்ந்த சாய் பல்லவி.!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu asks to provide his inners bigg boss 6 tamil

People looking for online information on பிக்பாஸ், Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Housemates will find this news story useful.