www.garudabazaar.com

BREAKING: இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பரிசோதனைமுடிவு.. வெளியான சமீபத்திய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கோவிட் -19 க்கு பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

Ponniyin Selvan Director Producer Mani Ratnam Medical Condition Update

Also Read | துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. ரிலீசான அடுத்த காதல் பாடல்.. வைரல் EVENT PHOTOS!

திரைப்பட தயாரிப்பாளர் & இயக்குனர் மணிரத்னம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை, அவரது மருத்துவ நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் கொரோனா பரிசோதனையில் முடிவு நெகட்டிவாக வந்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் தனது 70 ஆவது வயதில் காலமான திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான பிரதாப் போத்தனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மணிரத்னம் சில நாட்களுக்கு முன்பு பொது நிகழ்வில் தோன்றினார்.

Ponniyin Selvan Director Producer Mani Ratnam Medical Condition Update

பொன்னியின் செல்வன்: 1 படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படம், அதே பெயரில் ஐந்து தொகுதி நாவலை அடிப்படையாகக் கொண்டது,

Ponniyin Selvan Director Producer Mani Ratnam Medical Condition Update

மணிரத்னம் இந்நாவலை இரண்டு பாகம் கொண்ட திரைப்படமாக எடுக்கிறார். அவர் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தார். இந்த படம் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளுக்கு வர உள்ளது.

Ponniyin Selvan Director Producer Mani Ratnam Medical Condition Update

பொன்னியின் செல்வனின் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துளிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Also Read | முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ANTHOLOGY திரைப்படம்.. பிரபல OTT-யில் எப்போ ரிலீஸ்? வெளியான சூப்பர் TRAILER!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Director Producer Mani Ratnam Medical Condition Update

People looking for online information on Mani Ratnam Health Condition, Maniratnam, Ponniyin Selvan Director will find this news story useful.