நடிகை ஸ்ரேயாவிடம் லண்டன் போலீஸ் விசாரணை - 'சண்டக்காரி' ஷுட்டிங்கில் பரபரப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 10:36 PM
விமல் - ஸ்ரேயா இணைந்து நடித்து வரும் படம் 'சண்டக்காரி'. இந்த படத்தை பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தை 'மதுர' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக தேவேந்தர் சிங் கில் நடிக்க, பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள மிகப்பெரிய ஏர்போர்ட்டான ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது,
அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர்,, "எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் " என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர்.
அப்போது உடன் நடித்துக்கொண்டிருந்த விமல் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து தன்னிடம் இருந்த உரிய ஆவணங்களை காட்டி படப்பிடிப்ற்காக வந்து இருக்கிறோம் என்பதையும் விளக்க போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரேயாவை புன்னகையுடன் அனுப்பி வைத்தனர்.