www.garudabazaar.com

பிரபல OTT-ல் வெளியாகும் 100 கோடி பட்ஜெட்டில் உருவான மோகன்லால் நடித்த புதிய படம்! எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் நடித்த மற்றும் தேசிய விருது வென்ற மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்)  திரைப்படம் இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக Prime Video  அறிவித்துள்ளது. பிரபல நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய காவிய சாகசமான மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்)  திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான Prime Video உங்கள் திரைக்கு எடுத்து வருகிறது. ஆசீர்வாத் சினிமாஸ்ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் எழுதி இயக்கி, அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மறைந்த நெடுமுடி வேணு மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்பிரம்மாண்டமான மலையாள மொழித் திரைப்படம் இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

Watch Marakkar Lion of Arabian Sea On Prime, Dec. 17

இந்த சரித்திர நாடகம், இந்தியாவின் தலைசிறந்த கடற்படைத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் குஞ்சாலி மரக்கார் IV-இன் வாழ்க்கை வரலாறு ஆகும். மலபார் கடற்கரையின் இந்த அச்சமற்ற கடற்தளபதியின் தலைமையில் போர்த்துகீசிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக போரிட்டு  பின்னர் கோழிக்கோட்டை ஆண்ட ஜாமோரின்-இன் கடற்படைத் தளபதியாக ஆன மரக்கார் பற்றிய கதை இது. மலையாளத் திரையுலகில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே  அதிகம் செலவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது, இது அக்டோபர் 2021 இல் 67வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த காஸ்ட்யூம்க்கான விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“திரைப்படத்தைக் கண்டு ரசித்த  பார்வையாளர்களின் கருத்துகளை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மேலும் எனது ஒவ்வொரு ரசிகர்களும் அளித்த அன்புக்கும் எனது நன்றிகள். இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று அழைக்கப்படும் குஞ்சாலி மரக்கரின் பிரபலக் கதையை உயிர்ப்பிக்கும் இப்படத்தின் நான் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரியது, ”என்று பிரபல நடிகர் மோகன்லால் கூறினார். அவர் மேலும் கூறுகையில்  “இது ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும் உணர்ச்சிகளையும் தொடும் கதை என்று நான் நம்புகிறேன். இக்கதையை அசாதாரணமான அளவில் உயிர்ப்பிக்க முடிந்தது ஏன் கனவு நனவானதை உறுதி செய்தது. Prime Video-இல் மரக்கார் டிஜிட்டல் பிரீமியராகக் காட்சிப்படுத்தப்படுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இத்திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்கும்." என்றார்.

“Prime Video-இல் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்)  திரைப்படம்  வெளியாவதை அறிந்து  நான் மிகவும் உற்சாகம் கொண்டுள்ளேன். இப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, கடந்த 20 வருடங்களாக எனக்கும் லாலேட்டனுக்கும் இருந்த ஒரு கூட்டுக் கனவு இது. இந்த திட்டத்தை நிறைவேற்ற அவர் அளித்த ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன், ”என்று படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான பிரியதர்ஷன் கூறினார். மேலும் கூறுகையில் “மரக்கார் வெறும் திரைப்படம் அல்ல, ஒரு இலக்கியம்; என்றென்றும் நினைவில் நிற்கும் அனுபவம் இது.  இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களால் Prime Video-இல் இப்படம் கண்டு ரசிக்கப்படும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். " என்றார்.

Watch Marakkar Lion of Arabian Sea On Prime, Dec. 17

Amazon Prime Video, இந்தியாவின் கன்டென்ட் லைசன்சிங் துறையின் தலைவர் மணீஷ் மெங்கானி கூறியதாவது: “விருது வென்ற பிரம்மாண்டமான திரைப்படம்  மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்)  திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை Prime Video-இல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆசீர்வாத் சினிமாஸ் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் மோகன்லால் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரின் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கலவையில் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரால் வலுப்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறோம். வாடிக்கையாளருக்கு முன்னுரிமை எனும் அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் PrimeVideo பெருமிதம் கொள்கிறது, மேலும் இந்த ஆண்டை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மெகா என்டர்டெய்னருடன் நிறைவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Watch Marakkar Lion of Arabian Sea On Prime, Dec. 17

கதை சுருக்கம்: மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்) , இந்தியாவின் தலைசிறந்த கடற்படைத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நிஜ வாழ்க்கைக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு ஆகும். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் காட்சிப்படுத்தப்படுள்ள இந்தத் திரைப்படம், மலபார் கடற்கரையின் அச்சமற்ற கடற்தளபதியாகவும் பின்னர் கோழிக்கோட்டை ஆண்ட ஜாமோரின் (சாமூத்திரி)-இன் கடற்படைத் தளபதியாகவும் இருந்த குஞ்சாலி மரக்கார், , போர்த்துகீசியர்கள் ஒரு கடற்படை போரில் தோற்கடித்த கதையைக் கூறுகிறது. கதை குஞ்சாலி மரைக்காயர் 4 (முகமது அலி) -ஐ மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் பல்வேறு நாவல்கள் மற்றும் குஞ்சாலி மரைக்காயர் பற்றி எழுதப்பட்ட நூல்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது மற்றும் இது ஒரு ஆடம்பரமாகஉருவாக்கப்பட்ட சரித்திர நாடகமாகும். இப்படம், இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் Prime Video-இல் திரையிடப்படும், மேலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் காணக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Watch Marakkar Lion of Arabian Sea On Prime, Dec. 17

People looking for online information on Amazon Prime, அமேசான் பிரைம், கீர்த்தி சுரேஷ், மரக்கார், மோகன்லால், Keerthy Suresh, Marakkar, Mohan Lal, OTT will find this news story useful.