MKS Others
www.garudabazaar.com

Samantha: “பிரிவால் மனம் நொறுங்கி இறந்துடுவேன்னு நினைச்சேன்!”.. அதிர்ச்சி கிளப்பிய நடிகை சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

thought i would die after separation samantha breaks first time

Samantha: கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா (Samantha), தனது கணவர் நாக சைதன்யாவை மனமொத்து பிரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

thought i would die after separation samantha breaks first time

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பொது ஊடகங்களிடையே மனம் திறந்த நடிகை சமந்தா, “மனதளவில் தான் மிகவும் பலவீனமானவள். எனவே விவாகரத்து பிரிவால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.

thought i would die after separation samantha breaks first time

மேலும் “எனக்கு தெரியும், நான் இனி தான் என் வாழ்க்கையை வாழப்போகிறேன். தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு உண்டாகும் பிரச்சனைகளை நான் எதிர்கொள்ளும் போதுதான்  என் மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

thought i would die after separation samantha breaks first time

நடிகை சமந்தா, தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷாந்த ரூபன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இதேபோல் ஹரி & ஹரிஷ் இயக்கத்தில் யசோதா எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

thought i would die after separation samantha breaks first time

தவிர அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

thought i would die after separation samantha breaks first time

People looking for online information on சமந்தா, சமந்தா நாக சைதன்யா பிரிவு, சமந்தா நாக சைதன்யா விவாகரத்து, சமந்தா விவாகரத்து, தமிழ் சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், நடிகை சமந்தா, Latest film news, Latest tamil news, Samantha, Samantha Akkineni, Samantha breaks out, Samantha divorce, Samantha naga chaitanya divorce, Samantha naga chaitanya separation, Samantha opens up, Samantha ruth prabhu will find this news story useful.