www.garudabazaar.com

பிச்சைக்காரன்- 2.. விஜய் ஆண்டனி அறிமுகம் செய்த கெட்டவார்த்தை?!.. இதுதான் அர்த்தமா! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Pichaikaran 2 Movie Anti Bikili Single Song Released

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி (14.04.2023) ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிக்கிலி பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய் ஆண்டனி, எழுதி இசையமைத்து பாடியுள்ளார்.

Pichaikaran 2 Movie Anti Bikili Single Song Released

இந்த பாடல் வீடியோவில், "தமிழ் மொழியை செழுமைப்படுத்த என்னால முடிந்த கெட்டவார்த்தை ஒன்றை கண்டுபிடித்துள்ளேன். கெட்ட வார்த்தை பேச அசிங்கமான வார்த்தை இல்லை கேட்பவருக்கு தான் அது. நான் கண்டுபிடித்த அந்த கெட்டவார்த்தை பெயர் “பிக்கிலி”. ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி,  பணபலத்தால் அவர்கள் வயிற்றில் அடித்து அவர்களை அடிமையாக்கி, பணத்திமிரில் ஆடுபவர்கள் தான் பிக்கிலி” என விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

பிச்சைக்காரன் - 2 படத்தோடு மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

Pichaikaran 2 Movie Anti Bikili Single Song Released

People looking for online information on Pichaikaran - 2, Vijay Anthony will find this news story useful.