www.garudabazaar.com

OPPENHEIMER படத்துக்காக அணு குண்டு சோதனையை நடததப்போகும் நோலன்.. தலைவன் வேற ரகம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

Christopher Nolan Oppenheimer Movie without cgi for nuclear fusion

Also Read | TRENDING: "தளபதி 67" தீபாவளி ரிலீஸா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

ஓப்பன்ஹைமர் என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது.  இந்த படம், கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வருகிறது.

இத்திரைப்படம் Syncopy Inc. மற்றும் Atlas Entertainment ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும், நோலன், எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்.

Christopher Nolan Oppenheimer Movie without cgi for nuclear fusion

இரண்டாம் உலகப் போரின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய மன்ஹாட்டன் திட்டத்தில் அவரது பங்கிற்காக "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரான ஓப்பன்ஹைமராக சில்லியன் மர்பி நடிக்கிறார். நோலனுடன் மர்பி ஆறாவது முறையாக இணைந்துள்ளார்.

Christopher Nolan Oppenheimer Movie without cgi for nuclear fusion

மர்பியுடன் எமிலி பிளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், மற்றும் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 21, 2023 அன்று அமெரிக்காவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் விநியோகம் செய்யாத நோலனின் முதல் படம் இது. இந்த படம் IMAX, 70mm & 35mm ஆகிய இரு முறைகளில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும். ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது.

Christopher Nolan Oppenheimer Movie without cgi for nuclear fusion

இந்நிலையில் அமெரிக்காவின் வெரைட்டி மீடியா கம்பெனிக்கு நோலன் அளித்துள்ள பேட்டியில், ஓப்பன்ஹைமர் படத்திற்காக Trinity என்ற முதல் அணுகுண்டு சோதனையை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் உருவாக்குவது சவாலானது என கூறியுள்ளார். படப்பிடிப்புக்காக மாதிரி அணுகுண்டு சோதனையை நடத்த உள்ளதாகவும் நோலன் கூறியுள்ளார். இதற்காக ஆண்ட்ரு ஜாக்சன் என்ற  VFX மேற்பார்வையாளரை நியமித்து பணிகள் துவங்கி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Also Read | துணிவு படத்தின் 2-வது சிங்கிள் பாடல் இதுதானா?.. வைரலாகும் ஜிப்ரான் - வைசாக் ட்வீட்?

Christopher Nolan Oppenheimer Movie without cgi for nuclear fusion

People looking for online information on Christopher Nolan, Nuclear fusion, Oppenheimer Movie will find this news story useful.