www.garudabazaar.com

பீட்டர் பால் பற்றி பகீர் தகவல்கள் சொன்ன அவரின் உதவி இயக்குநர் பிரஷாந்த்.!! - ''நிஜமான வில்லன்..,''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீட்டர் பால் குறித்து அவரது உதவி இயக்குநர் பிரஷாந்த் கிருபாகரன் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | peter paul's associate director prashanth kirubakaran shocking details about him after vanitha marriage

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் பிக்பாஸ் போட்டியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், முதல் முறையாக பீட்டர் பால், வனிதா விஜயகுமாருடன் பேட்டி அளித்தார். 

பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | peter paul's associate director prashanth kirubakaran shocking details about him after vanitha marriage

இந்நிலையில் பீட்டர் பாலின் Associate Director-ஆன பிரஷாந்த் கிருபாகரன் அவரை பற்றி பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''பீட்டர் பால் இயக்கவிருந்த சையின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நான் அசோசியட்டாக பணியாற்றினேன். அப்போது அவரிடம் அதற்கான ஸ்க்ரிப்ட் கூட இல்லை. இருந்தும் தயாரிப்பாளர் வாக்கு கொடுத்துவிட்டதால், அவர் அப்படத்தை தயாரிக்க விரும்பினார். இதையடுத்து நாங்கள் ஒரு மாதமாக பணியாற்றி, திரைக்கதையை தயார் செய்தோம். 

மேலும் தயாரிப்பாளரின் பணத்தில் அவர் ஹீரோயின்களுக்கு கதை சொல்வதாக மும்பைக்கும் சென்று வந்தார். ஆனால் அதன் பிறகு பீட்டர் பால் முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுக்காமல், நடிகர்கள் தேர்வு நடத்தி கொண்டிருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் பிரச்சனையாக, அவர் படத்தை ட்ராப் செய்வதாக முடிவு செய்தார். மேலும் அண்மையில் பீட்டர் பால் தனது ஆபீஸ் என பேட்டியளித்தது, அவருடையது அல்ல, அது தயாரிப்பாளுடையது. அவரிடம் வேண்டி கேட்டு கொண்டுதான், இந்த பேட்டியை அவர் கொடுத்துள்ளார். 

மேலும் திரைக்கதை அமைப்பின் போது பீட்டர் பால் ஒரு பெண்ணுடன் பேசி வந்ததாகவும், அவர்தான் தன் என மனைவி என்று சொன்னதாகவும் கூறினார். ஆனால், அது இப்போது புகார் கொடுத்திருக்கும் ஹெலன் அல்ல. இப்படி அவர் எப்போதும் பொய்களையே சொல்லி கொண்டிருந்தார். மேலும் அவர் தயாரிப்பாளரின் பணத்தை பெரிதளவில் வீணடித்துள்ளார்'' என தெரிவித்துள்ளார். 

மேலும், ''இந்த விவகாரத்தில் வனிதாவை எல்லோரும் வில்லன் என சொல்கிறார்கள். ஆனால், அவரை ஏமாந்து போய் கொண்டிருக்கிற Victim-ஆகதான் நான் பார்க்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் பிரஷாந்த் கிருபாகரன்.

பீட்டர் பால் பற்றி பகீர் தகவல்கள் சொன்ன அவரின் உதவி இயக்குநர் பிரஷாந்த்.!! - ''நிஜமான வில்லன்..,'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | peter paul's associate director prashanth kirubakaran shocking details about him after vanitha marriage

People looking for online information on Peter Paul, Peter Paul Associate, Prashanth Kirubakaran, Vanitha will find this news story useful.