Udanprape others
www.garudabazaar.com

"உங்க மேல Complaint இருக்கு!" .. சமைத்துக் கொண்டிருந்த தாமரையிடம் கூறிய பாவனி!.. BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக திகழ்பவர் தாமரைச்செல்வி. அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் கதைசொல்லும் டாஸ்கில் தாமரைச்செல்வி தன்னுடைய உருக்கமான கதையை கூறியிருந்தார்.

pavani complaints thamarai selvi kitchen biggbosstamil5

முன்னதாக தாமரைச் செல்விக்கும் நமீதாவுக்கு இடையே சிறு உரசல் ஏற்பட்டது. அதன் பின்னர் நமீதாவே தாமரை செல்வியிடம் சமாதானம் பேசிவிட்டார். அதன் பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  

இதனிடையே தற்போது தனது கதையை ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் தாமரை செல்வி கூறியிருந்தார். அதன்படி, நாடகக்கலை நடிகையான இவர், குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் நாடகக் கலையில் இணைந்து சிரமங்களுக்கிடையே, நாடகங்களில் 200 ரூபாய்க்கு பல ஆண்களிடம் கண்ட பேச்சை வாங்கி, பல கஷ்டங்களைத் தாங்கி வளர்ந்ததாகவும், கணவரின் கொடுமை தாளாமல் பிரிந்து 2வது திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரையும் பிரிந்து வாழ்வதாக தாமரைச் செல்வி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன் மகனை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும், தன் கண்ணில் காட்டி நான்கு மாதம் ஆகிறது என்றும் கூறி அழுத தாமரை செல்வி,  தன்னைப்பற்றி தவறாக தன் மகனிடம் சொல்லி தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் கூறி வருந்தி இருந்தார். தனக்கு எப்படி பேசவேண்டும் என்று தெரியாது என்றும், தவறுதலாக பேசுவதாக தனக்கு அறிவுறுத்தினால் தான் தனக்குத் தெரியும் என்றும் தாமரை செல்வி பேசியிருந்தார்.

அத்துடன் தன்னுடைய மாமியார் தனக்கு சப்போர்ட்டாக இருப்பதாக தெரிவித்த தாமரைச்செல்வி, அன்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பலூன் உடைத்தல் போட்டியில் சின்னப்பொண்ணுவிடம் கடைசியாக மோதி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின்னர் தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டுக்கு தலைவர் ஆனார்.

இந்நிலையில் கிச்சன் டீமில் இருந்தபடி தாமரை சமைத்துக் கொண்டிருக்க, அவர் அருகே சென்ற பாவனி, தாமரையை பார்த்து, “உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ண போறேன்!” என்று சொல்கிறார். உடனடியாக தாமரை அதிர்ச்சியாகிறார். ஆனால் அப்போது விளையாட்டாக, அதை ரசித்தபடி, “நைட்டெல்லாம் உட்கார்ந்து நீ சிரித்துப் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாய்.. நான் போய் கம்ப்ளைன்ட் பண்ண போறேன்!” என்று பாவனி கூறி கலகலப்பாக பேசுகிறார்.

தாமரைச் செல்வி பிக்பாஸ் வீட்டின் தலைவரான பிறகு, “ஹவுஸ் மேட்ஸ் காலையில் சீக்கிரம் எழுவது இல்லை, தாமதமாகவே மீட்டிங்கிற்கு ஒருங்கிணைகிறார்கள். மைக்கை ஒழுங்காக மாட்டுவதில்லை” என பல புகார்கள் இருப்பதாகவும், அவற்றையெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்தி சரி செய்ய வேண்டும் என்றும், தாமரையை தனியாக கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தாமரைச்செல்வி போட்டியாளர்களுக்கு இதனை தெரியப்படுத்தி  “தலைவர் என்கிற பயம் இருக்கா? இல்லையா?” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

pavani complaints thamarai selvi kitchen biggbosstamil5

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5, Pavani, PavaniReddy, Thamaraiselvi, VijayTelevision, Vijaytv will find this news story useful.