www.garudabazaar.com

"டேஸ்ட் இருக்கு.. பிரச்சனையே இதான்!".. சிக்கன் கிரேவி குறித்து பாவனியிடம் அண்ணாச்சி ஆதங்கம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணாச்சிக்கும் பாவனிக்குமான உறவு ஒரு நெகிழ்ச்சியான உறவாக இருந்து வருகிறது.

imman annachi asks extra gravy pavani biggbosstamil5

பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி தன்னுடைய கணவரின் எதிர்பாராத மரணம், அதற்கு தன் மீது விழுந்த பழி, கணவரின் குடும்பம் தனக்கு இப்போதுவரை உறுதுணையாக இருப்பது என அத்தனையையும் கூறி இருந்தார். அதன் பின்னர் இமான் அண்ணாச்சியிடம் தனிமையில் பேசும்போது, தன்னுடைய கதையை முழுமையாக இன்னும் சொல்லவில்லை என்று கூறியிருந்தார்.

“பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வளவு கதையையும் சொல்லி விட்டு, இன்னும் முழு கதையை சொல்ல வில்லை என்கிறாயே? என்னிடம் சொல்?” என்று இமான் அண்ணாச்சி கேட்க, தன்னுடைய தனிமை நிலை, எதிர்காலத் திட்டம், திருமண வாழ்க்கை உள்ளிட்டவற்றில் தனக்கு இருக்கும் குழப்பங்களையும் பற்றி பாவனி கூறுகிறார்.

அதற்கு, “நாங்கள் எல்லாம் இருக்கிறோம் அல்லவா? நான் கஷ்டமாக இருந்தால் என்னிடம் தானாகவே வந்து பேசி அண்ணாச்சி மகிழ்ச்சி படுத்துவார் என்று நீ சொல்லி எனக்கு ஹார்ட் கொடுத்தது எனக்கு பெருமையாக இருந்தது” என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார். அதற்கு பாவனி, “நான் உங்களுக்கு மிகச்சிறிய வயதுடைய தங்கை. நீங்கள் எனக்கு அதிக வயதுடைய அண்ணன்” என்று கூறி நெகிழ்ந்தார்.

இந்த நிலையில் கிச்சனில் சுருதியுடன் சேர்ந்து பாவனி சமைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் அண்ணாச்சி சிக்கன் கிரேவி பற்றி கேட்கிறார். அப்போது, சிக்கன் கிரேவி மிகவும் டேஸ்டாக இருப்பதாகவும், அதே சமயம் அளவுதான் மிகக் குறைவாக இருக்கிறது.. அதுதான் உங்களின் டீம் மேல் மிகப்பெரிய புகார் என்றும் அண்ணாச்சி கூறுகிறார்.

அதற்கு பாவனியோ, “இரண்டு கிலோகிராம் சிக்கனில் எவ்வளவுதான் அண்ணா சமைப்பது?” என்று கேட்க, “கொஞ்சம் தண்ணி ஊத்தி” என்று இமான் இழுக்க, அதற்கு சுருதி, “சாப்பிடும்போது கொஞ்சம் திருப்தியாக சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்பதற்காக தான் அப்படிச் செய்வதில்லை” என்று கூறுகிறார்.

அதற்கு அண்ணாச்சி மீண்டும், “நம் ஊரில் டேஸ்ட்டாக சாப்பிடுபவர்களை விட அளவுக்காக சாப்பிடுபவர்கள் தான் கொஞ்சம் அதிகம்” என்று கூற, மறுத்து பேசிய பாவனி, “எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க இல்ல அண்ணா?” என்று இமானுக்கு புரியவைக்க முயற்சி செய்கிறார். இந்த காட்சிகள் அன்சீன் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.‌

imman annachi asks extra gravy pavani biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, ImanAnnachi, ImmanAnnachi, PavaniReddy will find this news story useful.