www.garudabazaar.com

"அண்ணாத்த படத்துக்கு 4 டிக்கெட் வேணும்!".. மாஸ் காட்டிய சூரி.. ‘எந்த’ படத்துல தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம் படங்களின் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

soori annaththe reference in jyothika sasikumar udanpirappe

ரஜினிகாந்த் நடிப்பில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள இந்த திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெற்றியின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையின்  “அண்ணாத்த படத்திற்கு 4 டிக்கெட் வேணும்” என்று சூரி பேசும் வசனம் ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜோதிகா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் கூட்டுத் தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது இரா. சரவணனின் இயக்கத்திலான ‘உடன்பிறப்பே’.

ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி, வேல ராமமூர்த்தி, நிவேதிதா சதீஷ், தீபா மற்றும் பலரது நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என கமர்ஷியலாக பேசுகிறது ‘உடன்பிறப்பே’ படம்.

இப்படத்தில் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இவர் இப்படத்தின் ஒரு காட்சியில் ஜோதிகாவை அடகுவைத்த நகையினை மீட்டு வருவதற்காக சேட்டு அடகு கடை ஒன்றுக்கு சென்று அந்த கவுண்டருக்குள் தலையை விடுவார்.

அதற்கு அந்த சேட்டு என்ன வேணும் என கேட்க, பதிலுக்கு சூரி, “அண்ணாத்த படத்திற்கு 4 டிக்கெட் வேணும்” என்று கூறுவார்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் ஜோதிகாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

soori annaththe reference in jyothika sasikumar udanpirappe

People looking for online information on 2D Entertainment, Annaatthe, Era. Saravanan, Jyothika, Nayanthara, Rajinikanth, Siruthai Siva, Soori, Suriya, Udanpirappe will find this news story useful.