பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' - எப்போ ரிலீஸ் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 06, 2019 06:36 PM
நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். வேறு யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை.

இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் குளிருதா புள்ள என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை விவேக் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த படத்துக்கு சத்யா பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து இரண்டு டிரெய்லர்கள் வெளியாகி ஏற்கனவே நல்ல கவனம் பெற்றுள்ளன.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த படத்தை பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.