சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு வெள்ளிவிழா படங்களை இயக்கிய இயக்குநர் விசு(74) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இயக்குநராக மட்டுமின்றி நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், கதாசிரியர் என பல்வேறு பரிமாணங்களிலும் ஜொலித்தவர் விசு.

இவரின் இயக்கத்தில் வெளியான 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசுவின் மறைவுக்குத் தமிழ்த்திரையுலகின் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “விசு சார் RIP-தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர்.தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர்.“உங்கள் மாமனாரை கேட்டுப்பாருங்கள்”என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன்.அடிக்கோடிட்ட argument.மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை,'' என்று தெரிவித்து உள்ளார்.
விசு சார் RIP-தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர்.தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர்.“உங்கள் மாமனாரை கேட்டுப்பாருங்கள்”என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன்.அடிக்கோடிட்ட argument.மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 23, 2020