தனுஷ் தரப்பில் நடந்தது என்ன.? - நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை - இயக்குநர் விசு உடைக்கும் உண்மை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விசு இயக்கிய நெற்றிக்கண் படத்தின் ரீமேக் குறித்த சர்ச்சைக்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன நடந்தது என இயக்குநர் விசு தெரிவித்துள்ளார்.

நெற்றிக்கண் குறித்து தனுஷ் விசுவிடம் விளக்கம் | Dhanush's response over Visu's Netrikkan remake issue

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தில் ரஜினி அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இத்திரைப்படத்தின் கதையை இயக்குநர் விசு உருவாகினார். 1981-ல் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்த நிலையில் தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்வதாக தகவல் பரவி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் விசு வெளிப்படையாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், 'நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சைக்கு பின் தனுஷ் எனக்கு ஃபோன் செய்தார். நாங்கள் உங்களை எங்கள் இதயங்களில் வைத்திருக்கிறோம். என் அப்பா உங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அந்த மரியாதை எப்போதும் உண்டு. நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்வதாக வந்த தகவல் தவறானது. ஒரு பேட்டியில் எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்தால் நடிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு தான் நெற்றிக்கண் என பதில் சொன்னேன், மற்றபடி நான் அப்படத்தை ரீமேக் செய்யவில்லை, அதற்கான எந்த வேலையையும் ஆரம்பிக்கவில்லை' என விளக்கம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor