'நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது' - பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில் ரிது ஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Pa.Ranjith shares his thought about Neet Exam

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ரஞ்சித், 'நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிது ஸ்ரீ மற்றும் வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு.

நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள் ! என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து பதிலளித்த காயத்ரி ரகுராம், உங்கள் படங்கள் தோற்றுவிட்டால் நீங்கள் தற்கொலை பற்றி சிந்திப்பீர்களா? அல்லது உங்களது அடுத்த படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிப்பீர்களா ? அல்லது திரைப்படங்களையே தடை செய்யுங்கள் என்று போராடுவீர்களா ? என்று கேள்வி எழுப்பினார்.