www.garudabazaar.com

"மங்காத்தா-2 பண்ணா தல-ய கேட்டதா சொல்லுங்க".. ஹர்பஜனுக்கு வெங்கட் பிரபு சொன்ன தெறி பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.

venkat prabhu reply harbhajan friendship Mankatha2

அத்துடன் தமிழில் ட்வீட்களை பதிவிடுவதிலும் ரசிகர்களை கவர்ந்த ஹர்பஜன் சிங், தற்போது தமிழில் திரைப்படமே நடிக்கத் தொடங்கிவிட்டார். அப்படி ஹர்பஜன் சிங் தமிழில் தற்போது அறிமுக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Friendship.

இந்த திரைப்படத்தில் ஹர்பஜனுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக அறியப்பட்ட லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபுவை குறிப்பிட்டு “வெங்கட்  ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என ஹர்பஜன் சிங் கோரிக்கை வைக்க, பதிலுக்கு வெங்கட் பிரபு ரிப்ளை செய்துள்ளார்.

அதன்படி, “முதலில் நான் உங்களின் ஒரு பெரிய ரசிகன், மங்காத்தா-2 நடந்தால், எங்கள் தல-உடன் நீங்களும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா?

venkat prabhu reply harbhajan friendship Mankatha2

உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள்.” என வெங்கட் பிரபு பஞ்சாபியில் பதில் அளித்துள்ளதாக  ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவின் கமெண்டை மொழிபெயர்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Friendship திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர். இந்த படத்துக்கு சாந்தகுமார்.C ஒளிப்பதிவு செய்துள்ளார். D.M.உதயகுமார் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை JPR & Stalin தயாரித்துள்ளனர்.

"மங்காத்தா-2 பண்ணா தல-ய கேட்டதா சொல்லுங்க".. ஹர்பஜனுக்கு வெங்கட் பிரபு சொன்ன தெறி பதில்! வீடியோ

venkat prabhu reply harbhajan friendship Mankatha2

People looking for online information on Arjun Sarja, Friendship, Harbhajan Singh, Losliya, Mankatha, Venkat Prabhu will find this news story useful.