www.garudabazaar.com

LATEST: ஆண்ட்ரியா நடிக்கும பிசாசு-2 படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

mysskin andrea pisasu 2 movie audio rights update

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' திரைப்படம், ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, நடிகர்கள் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி வருகிறது. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்  திண்டுக்கல்லில் நிறைவுற்றது.

mysskin andrea pisasu 2 movie audio rights update

தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிசாசு-2 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

mysskin andrea pisasu 2 movie audio rights update

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

mysskin andrea pisasu 2 movie audio rights update

People looking for online information on Andrea Jermiah, Mysskin will find this news story useful.