சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியான பூஜா ஹெக்டே.. வெளியான தெறியான FIRST LOOK! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜுன், பிரபாஸ், விஜய் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்களுடன் நடித்த பிறகு, பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தயாராகி வருகிறார்.

salman khan pooja Hegde Kabhi Eid Kabhi Diwali first look out

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'சர்க்கஸ்' படத்திலும் பூஜா நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கிறிஸ்மஸ் வெளியீடாக வர உள்ளது. அடுத்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 'SSMB28' படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

salman khan pooja Hegde Kabhi Eid Kabhi Diwali first look out

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.   கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சல்மான் கானின் 'கபி ஈத் கபி தீபாவளி' படத்தின் படப்பிடிப்பை மும்பையில் உள்ள வைல் பார்லேயில் தொடங்கியது. இதில் பூஜா ஹெக்டே சல்மான் கான் கலந்து கொண்டனர்.

கறுப்புச் சட்டையில் போஸ் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, சல்மானின் பிரேஸ்லெட்டை வெளிப்படுத்தியபடி "படப்பிடிப்பு தொடங்குகிறது... 😉🎞" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் வரை, 10 நாட்கள் குறுகிய முதற்கட்ட இப்படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே தொடர்ந்து பணியாற்றுவார்.

salman khan pooja Hegde Kabhi Eid Kabhi Diwali first look out

அதேபோல்  கபி ஈத் கபி தீபாவளி பட சல்மான் கானின் முதல் லுக் ஸ்டில்லும் வெளியாகி உள்ளது. இதனை சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இரும்பு கம்பியுடன் பைக்கில் செல்லும் சல்மான் கான், நீண்ட முடியுடன் தோன்றியுள்ளார். கையில் பிரேஸ்லெட்டை  அணிந்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பரில் கபி ஈத் கபி தீபாவளி படம் ரிலீசாக உள்ளது. சல்மான் மற்றும் பூஜா தவிர, கபி ஈத் கபி தீபாவளியில் ஆயுஷ் சர்மா மற்றும் ஜாகீர் இக்பால் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மூலம் வெங்கடேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

salman khan pooja Hegde Kabhi Eid Kabhi Diwali first look out

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

salman khan pooja Hegde Kabhi Eid Kabhi Diwali first look out

People looking for online information on Kabhi Eid Kabhi Diwali, Pooja Hegde, Salman Khan will find this news story useful.