Reliable Software
www.garudabazaar.com

இயக்குநராகும் பா.ரஞ்சித் பட இளம் ஹீரோ! தலைப்பு என்ன தெரியுமா? அவரே வெளியிட்ட போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. 

PaRanjith Attakathi Dinesh to Direct new flick Vayiruda

சற்று மாறுபட்ட திரைமொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் வடசென்னை, கானா பாடல்கள் உள்ளிட்டவை பற்றிய ஒரு தெளிவான புரிதலை ரஞ்சித் கொடுத்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து தினேஷ் குக்கூ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்திலும் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் தினேஷ்க்கு ஒரு புதிய திருப்பத்தை தந்தது.

இதேபோல் ரஞ்சித்தின் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்திலும் தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இப்போது  “வயிறுடா” என்கிற படத்தை இயக்குகிறார். இப்படம் பற்றிய முழு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் இப்படம் தொடர்பான சில போஸ்டர்களை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தினேஷ்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dinesh (@vrdinesh27)

பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் இருந்த ஒரு போஸ்டரில் ஒருவர் வில் அம்புடன் குறிபார்த்துக் கொண்டிருக்க, அதில் வயிறுடா என்கிற தலைப்பும், அதற்கு கீழ் Directoer V.R.Dinesh என்று தினேஷின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தினேஷ் நடிப்பில் அண்மையில் நானும் சிங்கிள் தான் என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

PaRanjith Attakathi Dinesh to Direct new flick Vayiruda

People looking for online information on Attakathi Dinesh, Pa Ranjith, Rajinikanth will find this news story useful.