RRR Others USA
www.garudabazaar.com

viral ஹிட் “அரபிக்குத்து” …. இப்ப இந்த மொழிகள்லயும் வந்துடுச்சு – வேற லெவல் update!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் பேன் இந்தியா ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Arabic kuthu song hindi and teleugu version released now

“நான் ஒரு வீடு, எனக்கு உயிர் இருக்கு”… யுவன் வெளியிட்ட “அனந்தம்” டீசர்!

நெல்சன் விஜய் கூட்டணி…

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.  சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வைரலாகியுள்ளது.

Arabic kuthu song hindi and teleugu version released now

வைரல் ஹிட் அரபிக்குத்து…

இந்த திரைப்படத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அரபிக் குத்து பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த பாடல் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புரோமோவில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இந்தப் பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜாலியான அந்த ப்ரோமோவில் மூவரும் விஜய்க்கு போன் செய்து பேசுவது போலவும் உருவாக்கி இருந்தனர்.

Arabic kuthu song hindi and teleugu version released now

250 மில்லியன் வியூஸ்…

இந்தப் பாடல் வெளியான உடனேயே இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. மில்லியன் கணக்கான பார்வைகளை தாண்டி இந்த பாடல் சக்கைபோடு போட்டது. ரசிகர்களால் அதிகம் முணுமுணுக்கப் பட்டு வரும் பாடலாக தற்போது அரபிக் குத்து  பாடல் தற்போது வரை இருக்கிறது இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலில் வரும் ஹலமதி ஹபி போ என்கிற வரிகள் மிகவும் டிரெண்ட் ஆகி உள்ளன. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தனர். பீஸ்ட் படத்துக்கு ரசிகர்களைக் கவரும் ஒரு முக்கிய அம்சமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

Arabic kuthu song hindi and teleugu version released now

பிறமொழிகளுக்கு செல்லும் அரபிக்குத்து…

மொழி தாண்டியும் இந்த பாடல் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது பேன் இந்தியா ரிலீஸை முன்னிட்டு தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழைப் போலவே பிற மொழிகளிலும் இந்த பாடல் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துடித்தெழு தோழா".. ஜிப்ரான் இசையில் இன்ஸ்பிரேஷனான டாணாக்காரன் பட லிரிக் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Arabic kuthu song hindi and teleugu version released now

People looking for online information on Anirudh, Arabic Kuthu song, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.