ஆக்ஷன் முடிஞ்சுது.. இது ரொமான்ஸ்!.. Legend சரவணன் படத்தின் பரபரப்பு ஸ்டில்ஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்Legend சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட ஸ்டில்ஸ் எல்லாம் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

பிரபல இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெரி இயக்கத்தில் சரவணன் நடிக்கும் இந்த படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். வைரமுத்து, பா.விஜய், சிநேகன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர்.
இந்நிலையில் Legend சரவணன் ஹீரோவாக கலக்கும் இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நாயகி Urvashi Rautela (ஊர்வசி ராவ்டேலா) இணைந்துள்ள தகவல் அண்மையில் கசிந்தது. தற்போது மணலியில் மும்முரமாக இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஊர்வசி ராவ்டேலாவுடன் Legend சரவணன் நடிக்கும் பரபரப்பு ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களுள் Legend சரவணனுடன் நடிக்கும் நடிகர் விவேக் நடந்துவரும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
ALSO READ: 'விஜய் சேதுபதியின் 46வது மாஸ் படம்'.. தளபதி65 பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி தகவல்!
ஆக்ஷன் முடிஞ்சுது.. இது ரொமான்ஸ்!.. LEGEND சரவணன் படத்தின் பரபரப்பு ஸ்டில்ஸ்! வீடியோ