“கமல் சார் கூட நடிச்சாச்சு… அடுத்து இந்த ஆசைதான்”… விக்ரம் விழாவில் விஜய் சேதுபதி மாஸ் speech !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் பாடல் வெளியீடு நேற்று நடந்தது.

Vijay sethupathi viral speech in vikram audio launch

விக்ரம்…

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸாக உள்ள படமாக விக்ரம் உருவாகியுள்ளது.

Vijay sethupathi viral speech in vikram audio launch

ஆடியோ ரிலீஸ்…

நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது உள்ளது. இதையடுத்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Vijay sethupathi viral speech in vikram audio launch

விஜய் சேதுபதி…

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விழாவில் பேசிய அவர் “நான் கமல் சார் நடித்த நம்மவர் படத்தின் ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். ஆனால் அப்போது நான் மீசை கூட முளைக்காத சிறுவனாக இருந்தேன். என் உயரம் காரணமாக எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் அன்று முழுவதும் நான் கமல் சாரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படிப்பட்ட கமல் சாரோடு நான் திரையில் இடம்பெறுவது மகிழ்ச்சி. கமல் சார் இயக்கத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன்.

Vijay sethupathi viral speech in vikram audio launch

முதலில் ‘விக்ரம்’ படத்தில் நான் இல்லை. நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் வேறு சில நடிகர்களுக்கு சென்று கடைசியில் என்னிடம் வந்தது. என்னிடம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கடைசியில் அது நடக்க, விக்ரம் படத்தில் மகிழ்ச்சியாக நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“கமல் சார் கூட நடிச்சாச்சு… அடுத்து இந்த ஆசைதான்”… விக்ரம் விழாவில் விஜய் சேதுபதி மாஸ் SPEECH ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi viral speech in vikram audio launch

People looking for online information on Vijay Sethupathi, Vikram will find this news story useful.