ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குநர் பா.ரஞ்சித்.. வெளியான ஃபோட்டோ .. பெயர் என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'காலா' படத்துக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யா நடிப்பில் பாக்ஸிங்கை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இதற்காக ஆர்யா தயாராகும் ஜிம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் செம வைரலானது.

இந்த படம் வட சென்னை பகுதியில் பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை இது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் பா.ரஞ்சித் தரப்பில் இருந்து மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது. அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Pa Ranjith, Baby, Salpetta, Director