இளைஞருக்கு முத்தம் கொடுத்து ஓவியா வெளியிட்ட போட்டோ... காதலா? வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் இத்தனை சீசன்கள் கடந்தாலும் இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா இருக்கிறார். அதற்கு அவரது கள்ளம் கபடமில்லாத மனதும், அனைவரையும் நேசிக்கும் அந்த குணமும் தான் காரணம். இந்நிலையில் ஓவியா, பிக்பாஸ் போட்டியாளர் ஆரவை காதலித்தது நாம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஆரவ் மற்றும் ரஹீ இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஓவியா பங்கேற்கவில்லை.

oviya new photo goes viral முத்தம் கொடுத்து ஓவியா வெளியிட்ட போட்டோ

சமூக வலைதங்களில் அவரை ஏராளமானோர் பின்பற்றுகின்றனர் இந்நிலையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். ஒரு இளைஞருக்கு முத்தம் தருவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு 'LOVE'  என்று தலைப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை "ஓவியா தனது காதலரை அறிமுகப்படுத்துகிறார்" என்பதுபோல கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதுபற்றி ஓவியா தெளிவாக  இன்னும் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Oviya

தொடர்புடைய இணைப்புகள்

oviya new photo goes viral முத்தம் கொடுத்து ஓவியா வெளியிட்ட போட்டோ

People looking for online information on Oviya will find this news story useful.