ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு பிறகு செல்வராகவன் - தனுஷின் அடுத்த படம்... தலைப்பே வேற லெவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக செல்வராகவனும், மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக தனுஷும் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்தார். பத்து வருடங்களை கடந்தும், ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக காத்து கிடந்தனர்.

Selvaraghavan dhanush combo next film title செல்வா - தனுஷ் காம்போவில் அடுத்த படம்

இந்நிலையில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை செல்வராகவன் இயக்க தனுஷ் நடிப்பார் என்று அதிரடியான போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதற்குள்ளாகவே அடுத்த அதிரடியாக புதிய படத்தின் அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். தனுஷ் - செல்வராகவன் - யுவன் இணையும் இந்தப் படத்திற்கு "நானே வருவேன்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 'வி கிரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தீப்பற்றி எரியும் ஒரு பங்களா வீட்டின் முன்பு, கையில் சிகரெட்டுடன் தனுஷ் ஸ்டைலாக நிற்பது போன்று இருக்கும் இந்த போஸ்டர்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

 

Tags : Dhanush

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan dhanush combo next film title செல்வா - தனுஷ் காம்போவில் அடுத்த படம்

People looking for online information on Dhanush will find this news story useful.