www.garudabazaar.com

Official - தல அஜித் நடிக்கும் வலிமை... வெளியானது முக்கிய அப்டேட்.. செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thala ajith valimai film update தல அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்

இந்நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஜனவரி 14 அன்று ரிலீஸானது. இதனையடுத்து தல ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வாஞ்சையுடன் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை டேக் செய்தே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் அதற்கு மேலே போய் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் என யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களும் வைரலானது. தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை அப்டேட் பற்றி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Thala ajith valimai film update தல அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்

அவர் கூறும் பொழுது "வணக்கம். வலிமை படத்திற்காக நீங்கள் காட்டும் அன்பை பார்க்கும்பொழுது நெகிழ்ந்து போய்விட்டேன். நாங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக தீவிரமாக உழைத்து வருகிறோம். சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதுதான் இந்த படத்தின் சிறந்த அம்சமாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் முதல்முறையாக வலிமை படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags : Valimai, Ajith

தொடர்புடைய இணைப்புகள்

Thala ajith valimai film update தல அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்

People looking for online information on Ajith, Valimai will find this news story useful.