www.garudabazaar.com

லாரன்ஸ்-ன் அடுத்த படம்.. பிரபல இசையமைப்பாளருடன் கூட்டணி.!! டைட்டிலே மிரட்டலாதான் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ராகவா லாரன்ஸ் அடுத்தப்படம் | official announcement on raghava lawrence next film

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குநராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றும் ஆல் டைம் ஹிட் அடித்து வருகிறது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமின்றி, சமூக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் லாரன்ஸ் அதிகளவில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். 

இத்திரைப்படத்திற்கு ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகர் லாரன்ஸ் தற்போது காஞ்சனா திரைப்படத்தை லக்ஸ்மி பாம் என்று இந்தியில் படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ராகவா லாரன்ஸ் அடுத்தப்படம் | official announcement on raghava lawrence next film

People looking for online information on GV Prakash Kumar, Kathiresan, Raghava Lawrence, Rudhran will find this news story useful.