கொரோனா வைரஸை இப்படியும் எதிர்க்கலாமா ..? நிவேதா பெத்துராஜ் சொல்லும் ஐடியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, எங்கு பார்த்தாலும் அதை பற்றியே பேசப்படுகிறது. அதை எதிர்க்க, நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு ஐடியா சொல்கிறார்.

nivetha pethuraj shares a precaution idea to fight corona virus

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரு மாணவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தாக்கம் மற்றும், அதை எப்படி சமாளிப்பது என பேச்சுக்கள் நடந்த வன்னம் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை எப்படி எதிர்க்கலாம் என நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'மஞ்சள், மிளகு, துளசி மற்றும் இஞ்சி' ஆகியவற்றை கலந்து அவர் குடிக்கும் கசாயத்தை புகைப்படம் எடுத்து போட்டுள்ளார். இப்படத்துடன் சேர்த்து Fight #CoronaVirus எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor