புதிய பாதை மூலம் சினிமாவில் தடம் பதித்து சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் பெரிய பெயர் எடுத்தவர் பார்த்திபன். கடந்த ஆண்டு அவர் எடுத்த சோதனை முதற்சி படமான ஒத்த செருப்பு விமர்சன தரப்பில் பலரால் பாராட்டப்பட்டது. இதையடுத்து இவர் அடுத்து இயக்கும் இரவின் நிழன் படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இவர் தன் வீட்டில் பெட்டிக்குள் வைத்திருக்கும் 60க்கும் மேற்பட்ட ஸ்க்ரிப்டுகள் பற்றி ஊடகத்தில் தெரிவித்திருந்தது அவரின் சினிமா மீதான பற்றுதலை பறைசாற்றுகிறாது. இந்நிலையில் அவர் உலகெங்கும் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். தனக்கு வந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை ஸ்க்ரீன் ஷாட் செய்திருக்கும் அவர் தமிழிலும்… என்ற தலைப்போடு தமிழர்களின் பாரம்பரிய மருந்துகளை குறிப்பிட்டுள்ளார்.
தமிழிலும்... pic.twitter.com/kz2D3FQotq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 28, 2020