VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

பிரபல தமிழ் ஹீரோவுக்கு ஜோடியான 3 நடிகைகள்.. வெளியான கலர்ஃபுல்லான கேரக்டர் லுக் போஸ்டர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் மிகப் பெரிய படங்களை  தயாரித்த Viacom18 studios,  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”.

Nitham Oru Vaanam Movie Colourful Character Look Posters

இந்த படம் தெலுங்கில் “ஆகாஷம்”என பெயரிடப்பட்டுள்ளது.  Rise East Entertainment நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.  இப்படத்தை அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.

Nitham Oru Vaanam Movie Colourful Character Look Posters

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரீது வர்மா, சுபா எனும் கதாபாத்திரத்திலும், அபர்ணா பாலமுரளி, மதி  எனும் கதாபாத்திரத்திலும், ஷிவாத்மிகா மீனாக்ஷி எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். வண்ணமயமான கேரக்டர் போஸ்டருடன் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nitham Oru Vaanam Movie Colourful Character Look Posters

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என  இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Nitham Oru Vaanam Movie Colourful Character Look Posters

இப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க,  விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Nitham Oru Vaanam Movie Colourful Character Look Posters

People looking for online information on Aparna Bala Murali, Ashok Selvan, Nitham Oru Vaanam, Ritu Varma will find this news story useful.