www.garudabazaar.com

பிக்பாஸுக்கு பிறகு முதல் முறையாக நிஷா பேசி வெளியிட்ட வீடியோ... "நான் பட்ட துன்பத்தை விட"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, நேற்றைய தினம் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷாவை சில காரணங்களால் "அவர் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது.

Nisha Thanksgiving video after biggboss4tamil நிஷா பேசி வெளியிட்ட வீடியோ

மேலும் சிலர் "அவர் ரியோ மற்றும் அர்ச்சனாவின் சார்பாக தான் அவர் விளையாடுகிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இந்நிலையில் இன்றைய தினம் நிஷா வெளியேறிய பின்பு முதல் முறையாக பேசி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் "எனக்கு பிக்பாஸ் வீட்டில் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நான் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஆதரவு எனக்கு தந்தீர்கள். அது எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு தலைப்பாக அவர் "நான் பட்ட துன்பத்தை விட, அதில் நான் பெற்ற அனுபவமே சிறந்தது "என்று கூறியுள்ளார்.

பிக்பாஸுக்கு பிறகு முதல் முறையாக நிஷா பேசி வெளியிட்ட வீடியோ... "நான் பட்ட துன்பத்தை விட" வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nisha Thanksgiving video after biggboss4tamil நிஷா பேசி வெளியிட்ட வீடியோ

People looking for online information on Biggboss4tamil, Nisha will find this news story useful.