"நிர்பயாவுக்கு நீதி கெடச்சுடுச்சு, ஆனா எங்க தமிழ்நாட்டுல..." - நடிகர் கார்த்தி 'அதிரடி'..!
முகப்பு > சினிமா செய்திகள்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.இதுப்பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் தளத்தில் "கடைசியாக 8 வருடங்கள் கழித்து நீதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொள்ளாச்சி வழக்கிலும் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. இதில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மாற்றாக வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
Finally justice for Nirbhaya after 8 years. Wondering how long it will take for the Pollachi case to find justice. It’s been a year already. Hope we don’t forget the lessons we learnt from it!
Always stay safe. #NirbhayaCase
— Actor Karthi (@Karthi_Offl) March 20, 2020