www.garudabazaar.com

குட் நியூஸ் சொன்ன கண்மணி & நடிகர் நவீன் 😍.. வாழ்த்து மழையில் தம்பதியர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி சேகர்.

News Reader Kanmani Naveen Announced Her Pregnancy

Images are subject to © copyright to their respective owners.

காவிரி, மாலை முரசு, ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.  கடந்தாண்டு ஜூன் மாதம் இவர் நடிகர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா எனும் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நவீன் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வருகிறார்.

News Reader Kanmani Naveen Announced Her Pregnancy

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் கண்மணி சேகர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தம்பதியர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை தம்பதியர் வெளியிட்டுள்ளனர். அதில், "நாங்கள் இதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்க வேண்டும்  என்று  நினைத்திருந்தோம்... சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும் போது நாங்க இதை கொஞ்சமும் கவனிக்கல. மண்டையில் உள்ள கொண்டைய மறந்தது போல ஆகிவிட்டது. அதனால், பலரும் எங்ககிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் தான் சரி நம்ம ஃபேமிலிகிட்ட இதை சொல்லிடலாம் என்று முடிவு பண்ணிட்டோம். கடவுள் கொடுக்குறாங்க.. அதை நாம அப்படியே ஏத்துக்கணும்!' எனப் பேசியுள்ளனர். 

ரசிகர்கள் பலர் தம்பதியருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்

குட் நியூஸ் சொன்ன கண்மணி & நடிகர் நவீன் 😍.. வாழ்த்து மழையில் தம்பதியர்! வீடியோ

Tags : Kanmani, Naveen

தொடர்புடைய இணைப்புகள்

News Reader Kanmani Naveen Announced Her Pregnancy

People looking for online information on Kanmani, Naveen will find this news story useful.