தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் செயல்பட்டுவந்தார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் மீது புகார் எழுந்ததையடுத்து தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என். சேகர் நியமிக்கப்பட்டாார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியானது. தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நயமிக்கப்பட்டுள்ள அட்டாக் கமிட்டி பொறுப்பாளர்கள் நயமிக்ப்பட்டுள்ளனர்.
அவர்கள், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் எஸ்வி சேகர், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதிஷ்குமார், நடிகர் கே.ராஜன், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் துரைராஜ், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இனி இவர்களின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.