பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான கடைசி புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3வது நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 15 போட்டியாளார் பங்கேற்றுள்ள இந்த சீசனில் முதல் இரண்டு நாட்கள் பெரிதாக எவ்வித பரபரப்பும் இன்றி சுமூகமாக முடிந்தது. மூன்றாம் நாளான இன்று சில எமோஷனல் காட்சிகள், பொங்கல் சாப்பிடுவது பற்றிய விவாதம் என பல விஷயங்கள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான 2 புரொமோ வீடியோக்களும் வெளியான நிலையில், தற்போது போட்டியாளர்கள் ஜாலியாக ஆடிப்பாடி ஆட்டம் போடும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், அமைதியா சந்தோஷமா இருந்த இந்த குடும்பம் அனேகமாக அடுத்த வாரம் யுத்தக்களமாக மாறப்போகுது. அந்த யுத்ததுல நானும் இருப்பேன் என சாண்டி உறுதியாக கூறுவதால் அடுத்த வார யுத்தத்திற்கு பக்கா பிளான் செய்திருப்பதாக தெரிகிறது.
இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக ஒரு போட்டியாளர் வருவது போன்ற சர்ப்ரைஸ் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவது புது போட்டியாளரா அல்லது கெஸ்டா என்பது பற்றி இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே..! #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/175Lur3uIK
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019