தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
![Much awaited Thala Ajith's Nerkonda Paarvai trailer is out now Much awaited Thala Ajith's Nerkonda Paarvai trailer is out now](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/much-awaited-thala-ajiths-nerkonda-paarvai-trailer-is-out-now-photos-pictures-stills.jpg)
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.
‘ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்காக...’ - தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ