தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. வினோத் இயக்கும் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
![Vijay's Thalapathy 63 producer Archana Kalpathi wished Thala Ajith's Nerkonda Paarvai trailer Vijay's Thalapathy 63 producer Archana Kalpathi wished Thala Ajith's Nerkonda Paarvai trailer](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijays-thalapathy-63-producer-archana-kalpathi-wished-thala-ajiths-nerkonda-paarvai-trailer-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் டப்பிங் பணிகளின் போது அஜித் தனது பகுதிகளை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லருக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் வினோத்தின் ட்விட்டை பகிர்ந்து ஆல் தி பெஸ்ட் வினோத். நேர்கொண்ட பார்வை டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
All the very best @DirectorHvinoth Trailer looks Fab #NerkondaPaaravai https://t.co/6LtRpUHPkW
— Archana Kalpathi (@archanakalpathi) June 12, 2019