Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"இந்த படத்துக்குதான்யா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!".. வேற என்ன வேணும்? - இயக்குநர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி உள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. SJ சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

Nenjam Marappathillai Vignesh shivan Praises

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவன் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் இந்த நெஞ்சம் மறப்பதில்லை. இதைத்தவிர செல்வராகவன் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதேபோல் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் என்கிற படத்தில் அறிமுக நடிகராகவும் நடிக்கிறார் செல்வராகவன்.

இந்த நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டீசர் அந்த சிறப்பு  காட்சியில் எஸ்.ஜே.சூர்யா தனக்கு முன்னால் பயத்தில் உளறிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சும்மா இருடா சும்மா இருடா என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவனை அடித்துக் கொன்று விடுவார். பிறகு இவனையும் அவளைப் போல் புதைக்காமல் எரித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்வார். இந்த மிரட்டலான சிறப்பு காட்சியை பார்த்து அனைவரும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் செல்வராகவனை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, “இத்தனை வருடங்களில் நான் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த திரைப்படங்களில் ஒன்று இருந்தால் அது தான் இந்த திரைப்படம். இந்த இரண்டு மாஸ்டர்கள் மூலம் இப்படி ஒரு கிரேஸியான திரைப்படம் உருவாகி இருக்கிறது. இரண்டு லிஜெண்டரி எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் நடிப்பை கவனித்துக் கொள்கிறார். இன்னொருவர் திரைக்கதையை கவனித்துக் கொள்கிறார். இதை விட வேறு என்ன வேண்டும்?.. வெய்ட்டிங்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "டேய்.. சும்மா இர்ரா.. டேய்.. சும்மா இர்ரா!!".. SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை.. மிரட்டலான SneakPeak!

Nenjam Marappathillai Vignesh shivan Praises

People looking for online information on Regina Cassandra, Selvaraghavan, Sj suryah, Vignesh shivan, Yuvan Shankar Raja will find this news story useful.