www.garudabazaar.com
www.garudabazaar.com

‘ஜீனியஸ் சார் நீங்க!’.. விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய கவின்.. எதனால் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Kavin Praises Vignesh Shivan விக்னேஷ் சிவனை புகழ்ந்த கவின்

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியானது. ரெண்டு காதல் என்கிற இந்த பாடலில் வரும் சில வரிகளை குறிப்பிட்டு பிக்பாஸ் புகழ் கவின் சிலாகித்துப் பேசி இருக்கிறார். விஜய் டிவியில் சீரியல் நடிகராக இருந்த கவின் பின்னர் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இதனிடையே பிக்பாஸ் பங்கேற்ற கவின் மக்களிடத்திலும் புகழ் பெற்றார்.

தற்போது விக்னேஷ் சிவன் எழுதிய ரெண்டு காதல் பாடலைக் கேட்டுவிட்டு அந்த பாடலில் வரும் வரிகளான. “அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்... எங்கோ தெரிவதுபோல் மறைவது காதல்” என்கிற வரிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ஜீனியஸ் சார் நீங்க” என்று அவ்வரிகளின் ஆசிரியரும் அப்படத்தின் இயக்குநருமான விக்னேஷ் சிவனை டாக் செய்து ட்வீட் போட்டிருக்கிறார்.

Kavin Praises Vignesh Shivan விக்னேஷ் சிவனை புகழ்ந்த கவின்

இதேபோல் அனிருத்தையும் டேக் செய்து இப்படி ஒரு பாடலை தந்ததற்கு ரொம்ப நன்றி தல என்று குறிப்பிட்டிருக்கிறார் கவின்.

 

கடைசியாக ‘கவின் நட்புன்னா என்னனு தெரியுமா?’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

ALSO READ: 'அது தல தானே?'.. சர்ப்ரைசில் ஆழ்ந்த பொதுமக்கள்.. அஜித்தை இப்படி பாத்துருக்கீங்களா? #ViralVideo

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Praises Vignesh Shivan விக்னேஷ் சிவனை புகழ்ந்த கவின்

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Kavin, Vignesh Shiva, Vignesh shivan will find this news story useful.