விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோயில் தரிசனம்– வைரல் புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், அட்லி, நயன்தாரா கூட்டணியில் உருவான ‘பிகில்’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ரஜினியுடன் நடித்த ‘தர்பார்’ படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

Nayanthara who's starring RJ Balaji's Mookuthi Amman visited a temple with Vignesh Shivan

இதைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை என்ஜே சரவணன், ஆர்ஜே பாலாஜி இணைந்து இயக்குகிறனர். கன்னியாகுமரியில் தொடங்கி இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்த புகைப்படங்களும், அதன் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் தாமரைக்குளத்தில் உள்ள சுவாமித்தோப்பு ஐயாவழி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.