கன்னியாக்குமரியில் உள்ள கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 17, 2019 10:28 AM
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா இணைந்து நடித்த ’தர்பார்’ படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 2020 பொங்கலன்று திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து, ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை என்ஜே சரவணன், ஆர்ஜே பாலாஜி இணைந்து இயக்குகிறனர். கன்னியாகுமரியில் தொடங்கி இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா, சந்தோஷ் சிவனுடன் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஜோடிகள் மீண்டும் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags : Nayanthara, Vignesh shivan, Mookuthi Amman