www.garudabazaar.com

BGI2023 : "மணி Sir படத்துல நடிக்க வேண்டியது..".. பிஹைண்ட்வுட்ஸ் விருது நிகழ்வில் உடைத்த நயன்தாரா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றாக Behindwoods திகழ்கிறது.

nayanthara was supposed to act in maniratnam sir movie BGI2023

அரசியல், உடனுக்குடனான தினசரி நிகழ்வுகள், வணிகம், விளையாட்டு மற்றும் சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த, பிழைகள் அற்ற, அதிவேகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நம்பகமான கன்டன்களையே, மாதந்தோறும் சுமார் 4 கோடி பார்வையாளர்களுக்கு Behindwoods மீடியா தளம், தங்களது பயிற்சி அளிக்கப்பட்ட தரமான 400 ஊழியர்களைக் கொண்டு  EXCLUSIVE-வாக வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் Behindwoods Gold Digital & TV Awards ஆகிய விருது நிகழ்வுகள் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.

அவற்றின் ஒரு அங்கமான சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration நிகழ்வு கட்ந்த 2023, ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பல்லாயிரம் பார்வையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெற்றிக்கண், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான் மற்றும் ராஜா ராணி ஆகிய திரைப்படங்களுக்காக கடந்த பத்தாண்டுகளில் சிறந்த நடிகை விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை நயன்தாராவுக்கு முன்னணி இயக்குனர் மணிரத்னம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை நயன்தாரா, “திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நிச்சயம் இரண்டு ஆசைகள் இருக்கும். ஒன்று மணிரத்னம் சார் போன்று ஒரு இயக்குனராகிவிட வேண்டும், இன்னொன்று மணிரத்னம் சார் கையால் ஒரு அங்கீகாரத்தை பெற்று விட வேண்டும். அந்த வகையில் நான் மணிரத்னம் சார் கையால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி. மணிரத்னம் சாரின் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நான் நடிக்க வேண்டிய சந்தர்ப்பமும் இருந்தது; எனவே பிற்காலத்தில் ஒருவேளை மணிரத்னம் சாரின் திரைப்படத்தில் நடித்து அதற்காக விருது பெறும்போது இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைவேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

BGI2023 : "மணி SIR படத்துல நடிக்க வேண்டியது..".. பிஹைண்ட்வுட்ஸ் விருது நிகழ்வில் உடைத்த நயன்தாரா..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

nayanthara was supposed to act in maniratnam sir movie BGI2023

People looking for online information on Behindwoods Gold Icon, Behindwoods Gold Icons, BGI2023, Nayanthara will find this news story useful.