www.garudabazaar.com

"லவ் யூ மேம் 😍".. கூட்டத்தில் இருந்து கேட்ட சத்தம்.. அடுத்த கணமே நயன், விக்கி கொடுத்த ரியாக்ஷன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய மாயா திரைப்படத்தை S R பிரபு தயாரித்து இருந்தார்.

nayanthara vignesh shivan attend connect premiere show

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார் அஸ்வின் சரவணன். இதற்கு அடுத்த படியாக, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் 'கனெக்ட்'.

மாயா திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் நயன்தாராவுடன் இயக்குனர் அஸ்வின் சரவணன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில், நயன்தாராவுடன் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

கனெக்ட் திரைப்படம், 22.12.2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஹாரர் வகைமையில் உள்ளதால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மாயா, கேம் ஓவர் திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

nayanthara vignesh shivan attend connect premiere show

இன்னும் ஒரு சில தினங்களில் கனெக்ட் திரைப்படம், திரை அரங்குகளில் வெளியாக உள்ளதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் பிரீமியர் ஷோவும் திரையிடப்பட்டது.

அப்போது பத்திரிக்கைத் துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. அதே போல, கனெக்ட் படத்தின் நடிகை நயன்தாராவும் அவரது கணவர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவனும் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கனெக்ட் படத்திற்கு சிறந்த வரவேற்பும் பிரீமியர் ஷோவின் போது கிடைத்துள்ளதாக தெரிகிறது.

nayanthara vignesh shivan attend connect premiere show

அந்த சமயத்தில், அங்கே வந்த அனைவருக்கும் நயன்தாரா ஹாய் சொல்ல, மறுநொடியே கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், "லவ் யூ மேம்" என நயன்தாராவை பார்த்துக் கூறினார். இதனைக் கேட்டதும் வெட்கத்துடன் சிரிக்கத் தொடங்கிய நயன்தாரா, யாரு அது என கூட்டத்திற்கு நடுவே தேடுவது போல சைகையும் செய்தார். மறுபக்கம், விக்னேஷ் சிவனும் சிரித்துக் கொண்டே இருக்க, கூட்டத்தில் இருந்தவர்கள் கூட டேய் யாருப்பா அது என்பது போல கேட்க, இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

"லவ் யூ மேம் 😍".. கூட்டத்தில் இருந்து கேட்ட சத்தம்.. அடுத்த கணமே நயன், விக்கி கொடுத்த ரியாக்ஷன்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

nayanthara vignesh shivan attend connect premiere show

People looking for online information on Ashwin Saravanan, Connect, Nayanthara, Vignesh shivan will find this news story useful.